பயங்கரவாத குற்றச்சாட்டில் இருந்து வசந்த முதலிகே விடுதலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியத்தின் (IUSF) தலைவர் வசந்த முதலிகே விடுவிக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகே, கொழும்பு பிரதான நீதவானால் இன்று (31) விடுதலை செய்யப்பட்டார்.
இந்த தீர்ப்பை வழங்கிய கொழும்பு பிரதான நீதவான், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் வசந்த முதலிகேவை விடுதலை செய்தார்.
2022 ஆம் ஆண்டு அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மாணவர் செயற்பாட்டாளர் 140 நாட்களுக்கும் மேலாக PTA இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.