பறிக்கப்பட்ட மாகாண அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதியிடம் வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ்
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் பறிக்கப்பட்ட மாகாணங்களிற்கான அதிகாரங்கள் அனைத்தும் மாகாண சபைகளிடம் மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக் கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தொடர்பான விடயத்தில் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர வேண்டும் என்று கடந்த 35 வருடங்களாக ஈ.பி.டி.பி. வலியுறுத்தி வருகின்ற வழிமுறையையே தற்போது ஏனைய தரப்புக்களும் வலியுறுத்தி வருகின்றமை தன்னுடைய அரசியல் பயணத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்தார்.