பாராளுமன்றில் வைத்து அருச்சுனா தாக்கப்பட்டாரா?
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக யாழ் மாவட்ட சுயேட்சை உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு தனது நாடாளுமன்ற உரைக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறித்து விசாரிப்பதற்காக சென்றதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்ற வளாகத்திற்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், நாங்கள் எப்படி தெருவில் நடமாட முடியும்?’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏனினும் அர்ச்சுனா எதிர்கட்சித் தலைவர்களின் செயலாளருக்கு முன்பாக அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதுடன், நாடாளுமன்றத்திற்குப் புறம்பான வார்த்தைகளை உதிர்த்ததாகவும் உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும், அர்ச்சுனாவே தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
தாம் யாரையும் தாக்கவில்லை எனவும் கேகாலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.