பார்வையற்ற மாணவி ஒரு வருடம் முன்பு AL எழுதி 3 ஏ பெறுபேறு பெற்று சாதனை
குருநாகல் மாவட்டத்தை சேர்ந்த ஹிமாஷா என்ற பார்வையற்ற மாணவி 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையில் மூன்று ஏ சித்திகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.
இந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த போதிலும், தனியார் விண்ணப்பதாரராக கடந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்.
பொருளாதாரம், தர்க்கம், அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களில் மூன்று ஏ தேர்ச்சி பெற்றுள்ளார்.
2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய இந்த மாணவி ஒன்பது பாடங்களிலும் 9A சித்திகளை பெற்றிருந்தார்.
குறித்த மாணவி தனது வெற்றி குறித்து தெரிவிக்கையில்,
நான் இந்த வருடம் க.பொ.த A-level பரீட்சைக்குத் தோற்றவிருந்தேன். ஆனால் நான் பள்ளிக்கு செல்லாமல் படித்துவிட்டு ஒரு வருடத்திற்கு முன்பு தேர்வு எழுதினேன்.என் அம்மா பள்ளி ஆசிரியையாக இருந்ததால், அவரும் கல்விக்கு உதவி செய்தார்.
சட்ட பீடத்தில் நுழைந்து ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்பதே எனது இலட்சியம்.
அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று எனது ஒவ்வொரு சகோதர சகோதரிகளையும் கேட்டுக் கொள்கிறேன். நான் பார்வையற்றவராக பிறந்தேன் என யோசித்து நேரத்தை வீணாக்கவில்லை. படிப்பில் தன்னை அர்ப்பணித்ததாக மாணவி கூறினார்.