புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள்.
பத்தாவது பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நாளை மறுதினம் (14) நடைபெறவுள்ள நிலையில், 196 உறுப்பினர்களும், தேசிய பட்டியலின் மூலம் 29 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் 225 உறுப்பினர்களுடன் செயல்படும். முதலில், 21 நவம்பர் 2024 அன்று பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெறும்.
இந்த அமர்வில் முக்கியமான நடவடிக்கைகள் கையாளப்படும். முதலில், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஜனாதிபதியின் அறிவிப்பை வாசிப்பார். அதன்பிறகு, சபாநாயகர், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் தலைவர்கள் மற்றும் பிரதித் தவிசாளர்கள் தமது பதவிகளில் நியமிக்கப்படுவர். சபாநாயகர் அல்லது பிரதிச் சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படலாம்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயர் அட்டவணையில் கையொப்பமிட்டு தமது பதவிகள் உறுதிப்படுத்தப்படுவதைத் தொடர்ந்து, சபாநாயகர் மற்றும் பிரதிச் சபாநாயகர் உள்ளிட்ட கடமைகளை நியமிப்பதில் சபாநாயகரின் தலைமையில் செயல்படப்படும்.
முதலாவது அமர்வில், அனைத்துப் பகுதிகள் முடிந்ததும், எதிர்கால அமர்வுக்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும்.