புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவு!
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவதை இடைநிறுத்தி, இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 18) இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக, செப்டெம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற பரீட்சையின் மூன்று வினாக்கள் கசியப்பட்டது தொடர்பான புகாரின் பேரில், சில பெற்றோர்கள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை இன்று நீதிபதிகள் பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன அடங்கிய குழாமின் முன்னிலையில் நடைபெற்றது.
விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் கருத்துக்களை பரிசீலித்த நீதிபதிகள் குழு, பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவதை தற்காலிகமாக இடைநிறுத்தும் உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இதனுடன், பரீட்சை முறையில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பான விசாரணை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.