பூநகரி நகர மயமாக்கல் வரைபு தயார்
பூநகரி நகரமயமாக்கல் அபிவிருத்தி திட்டம் தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் தமது திட்டவரைபை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பூநகரியை மத்திய நகரமாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 500 மில். ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.
பூநகரியை மத்திய நகரமாக மாற்றும் உத்தேச திட்டத்தின் மூலம் நகர மையக்கட்டிடம், வடிகான் அமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், வர்த்தக பொருளாதாரக் கட்டமைப்பு, சுற்றுலா அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, என்பவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 5ம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகரமயமாக்கல் திட்டவரைபை மக்கள் முன் சமர்ப்பிக்கவுள்ளார்.
பூநகரியில் நடைபெறும் நிகழ்வில் வைத்து பூநகரி நகரமயமாக்கல் அபிவிருத்தி திட்டம் தொடர்பான அறிவிப்பினை ஜனாதிபதி முன்வைக்கவுள்ளார்.
இதனிடையே நகரமயமாக்கல் திட்ட நிதியை மீன்பிடிக்கிராமங்களின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய பயன்படுத்த சில தரப்புக்கள் முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.