பொல்லினால் தாக்கி ஒருவர் கொலை !

நாகொடை – கம்மெத்தேகொட பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில், ஒருவர் பொல்லினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (மே 10) பிற்பகலில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர், நாகொடை – கம்மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடையவர் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தற்போதைய விசாரணைகளில், தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், அவர் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக நாகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.