போலி இலட்சினைகளை மோட்டார் வாகனத்தில் பயன்படுத்திய பெண்ணுக்கு பிணை!
கண்டி நீதிமன்றம், உத்தியோகபூர்வ இலட்சினைகளை மோட்டார் வாகனத்தில் போலியாகப் பயன்படுத்திய பெண் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா பெறுமதி கொண்ட இரண்டு சரீரப் பிணைகள் வழங்கி, சந்தேக நபரை விடுதலை செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, மனித உரிமைகள் ஆணைக்குழு, ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு, மற்றும் அரச இலட்சினை போன்றவற்றை தனது வாகனத்தில் காட்சிப்படுத்திய பெண் ஒருவர், கண்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணையின் போது, சந்தேக நபராக பெயரிடப்பட்டவர் கண்டி அனிவத்தை பகுதியைச் சேர்ந்த ஒரு பிரபல வர்த்தகராக இருந்துள்ளார். அவர், நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ள போதிலும், 5 இலட்சம் ரூபாய் பெறுமதி கொண்ட சரீரப் பிணைகளை வழங்கி விடுதலை செய்யப்பட்டார்.