மத்திய வங்கி ஆளுநர் யாழ். பல்கலைக்கு விஜயம்
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராஜாவை அவரது அலுவலகத்தில் வைத்துச் சந்தித்து, சமகால விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்களுக்கு தற்போதைய பொருளாதார கொள்கைகள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.
இச் சந்திப்பில் கலந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க பதிலளித்தார்.
இக் கலந்துரையாடலில் மத்திய வங்கி ஆளுநர், மத்திய வங்கியின் பணிப்பாளர்கள், பிரதி பணிப்பாளர்கள் மற்றும் வட பிராந்திய முகாமையாளர் என 8 பேர் கலந்து கொண்டனர்.