மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது.
மலையகத்தில் பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தில் மொத்தம் 605,292 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர், இங்கு உள்ள பிரதான தேர்தல் தொகுதிகளின் விபரங்கள் பின்வருமாறு:
- மஸ்கெலியா: 347,646 வாக்காளர்கள்
- கொத்மலை: 88,219 வாக்காளர்கள்
- வலப்பனை: 90,990 வாக்காளர்கள்
- ஹங்குராங்கெத்த: 78,437 வாக்காளர்கள்
நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 65 வாக்கு எண்ணும் நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணிகள் நுவரெலியா காமினி தேசிய கல்லூரி மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளன.
இதற்காக 10,000 பேர் பணியில் ஈடுபட்டுள்ளதோடு, 2,500 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு பொறுப்பில் இருக்கின்றனர்.