மாகாணசபை நீக்கப்படாது – ஜேவிபி உறுதி

மாகாண சபை முறைமை நீக்குவது தொடர்பில் தற்போதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை என அநுர தலையிலான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு மூன்று வருடங்களின் பின்னரே கொண்டுவரப்படும். அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாட போதுமான கால அவகாசம் உள்ளது. புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறை தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு இருக்காது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாகாண சபை முறையை நீக்கப்பட உள்ளதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, கூறியுள்ள கருத்து பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயாக அந்தக் கருத்து மாறியுள்ளதால் அதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியிடம் விசேட கூற்றொன்றை முன்வைத்து கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க,

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதியிடம் கலந்துரையாடல் ஒன்றுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். ஜே.வியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுடன் அன்றி ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு ஒழுங்குபடுத்தி தருகிறோம். அதன்போது விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்.” ஏன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ,

மாகாண சபை முறையை நீக்குவது தொடர்பில் இந்தத் தருணம்வரை அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. புதிய அரசியலமைப்பை கொண்டுவர மூன்றுவருடங்கள்வரை செல்லும். புதிய அரசியலமைப்பு மக்களுடனான கலந்துரையாடலின் பின்னரே கொண்டுவரப்படும். கலந்துரையாடல்கள் நடத்த போதிய கால அவகாசம் உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.