மாகாண பயணத்தடை நீக்கம் – இராணுவ தளபதி அறிவிப்பு!
தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையானது எதிர்வரும் 31ம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை கூடிய கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கல்வி, சுகாதார மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் முன்னிலை பணியாளர்களுக்கு மூன்றாம் தடுப்பூசியை வழங்கும் முடிவும் எட்டப்பட்டுள்ளது.