மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!
வெலிஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயிலபிட்டிய அபோன்சுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர், தனது பேக்கரியில் உள்ள மின் விளக்கின் இணைப்புக் கம்பியில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி சிகிச்சைக்காக சம்பத்நுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.