மின்சார தடை ஏற்பட்டால் உடனடியாக CEB க்கு அறிவிக்கவும்!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மின் விநியோகத்தில் தடை ஏற்படுமாயின், இது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுமக்களைக் கேட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.இதன்படி வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் சேவையை பெற்றுக்கொள்ள முடியுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.