மியான்மாரில் சைபர் முகாம்களுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையர்களை, குழுக்கள் குழுக்களாக மியான்மாரில் உள்ள சைபர் முகாம்களுக்கு அனுப்புவது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தேசிய அதிரடிப்படை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், அண்மைக்காலமாக அதிகளவான இலங்கையர்கள் இந்த முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, அதிக கணினி அறிவு உள்ளவர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதாக கூறி, வேறு நாடுகளில் வேலைக்கு அனுப்புவதாக ஏமாற்றி வருகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு துபாயில் நேர்காணல் உள்ளதாக கூறி மியான்மாருக்கு அழைத்துச் செல்வதாகவும் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, வெளிநாடுகளுக்குச் செல்லும் போது சட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துமாறு, தேசிய அதிரடிப்படை பொதுமக்களுக்கு கேட்டுக் கொண்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 0112102570, 0768447700 என்ற தொலைபேசி எண்கள் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தகவல் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.