முதலாம் கட்ட பெரும் போக உர மானியம் கொடுப்பனவு நிறைவடைந்துள்ளது!

விவசாயிகளுக்கு பெரும் போகத்திற்கான உர மானியங்கள் வழங்கும் முதலாம் கட்டம் நிறைவடைந்துள்ளதாக  கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 23 மாவட்டங்களில் உள்ள 86,162 ஹெக்டயர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கைக்கு உர மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் கீழ் 129,229 விவசாயிகளுக்கு  சுமார் 1.29 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.பயிர்செய்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை கருத்தில் கொண்டு, உர மானியங்கள் வழங்கப்படுள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ஷ தெரிவிதுள்ளார்.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தில் சில பகுதிகளில் கிரிதலை மற்றும் கௌடுல்ல நீர்த்தேக்கங்களில் நீர் தாமதமாக திறக்கப்பட்டதன் காரணமாக, உர மானியங்களை வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.