முர்து பெர்னாண்டோ புதிய பிரதம நீதியமசராக பதவி பிரமாணம்!
இலங்கையின் 48ஆம் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அவர் இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண் ஆகும்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முர்து பெர்னாண்டோ 30 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிய பின்னர், 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.
இந்த பதவியில் அவர் முன்னர் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.