முழுமையாக யாழ் வல்லை – அராலி வீதியை திறக்குமாறு மக்கள் கோரிக்கை
வல்லை-அராலி வீதியின் மீதமுள்ள பகுதியை மக்கள் பயன்பாட்டுக்காக திறக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீதி கடந்த 34 ஆண்டுகளாக இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
தற்போது வசாவிளான் சந்தியில் இருந்து அச்சுவேலி தோலாக்கட்டி சந்தி வரை ஒரு கிலோமீட்டர் தூரம் மட்டும் திறக்கப்பட்டுள்ளது, ஆனால் மீதமுள்ள பகுதி இன்னும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனால் அச்சுவேலி மற்றும் வடமராட்சி பகுதிகளில் வாழும் மக்கள் வல்லை-அராலி வீதியூடாக பயணிக்க முடியாமல், சுற்றி பயணிக்க வேண்டிய சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
அதேவேளை, வசாவிளான் சந்தியில் இருந்து பலாலி வடக்கு பகுதிக்கு செல்லும் வீதிகளும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளதால், மக்கள் நேரடியாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள், இப்பகுதிகளில் வழிபாட்டு ஆலயங்களை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்பதுடன், அந்த பகுதியில் மீள் குடியேற்றத்தை அனுமதிக்குமாறு கோரியுள்ளனர்.