மேலும் 67 உயிரிழப்பு! தொற்றால் உயிரிந்தோர் விபரம்!
நாட்டில் மிக வேகமாக பரவும் தொற்றினால் மேலும் 67 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,910ஆக அதிகரித்துள்ளது.
தொற்றால் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட அதி கூடிய மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
நேற்று (09) உறுதி செய்யப்பட்ட 67 மரணங்களில் 24 பெண்களும், 43 ஆண்களும் அடங்குகின்றனர்.
ஏறாவூர், அம்பேபுஸ்ஸ, பரந்தன், வத்தளை, வாழைச்சேனை, கொழும்பு-14, கொழும்பு-15, வெல்லம்பிட்டி, நீர்கொழும்பு, வெல்லவாய, கரந்தெனிய, அவிசாவளை, ஏக்கல, துலங்கடவல, கனேமுல்ல, வெலிசறை, பண்டாரகம, கோனவல, காலி, கம்பளை, தெனியாய, பொகவந்தலாவை, பரகடுவ, தெடிகமுவ, பூஜாபிட்டிய, மொரட்டுவை, வாத்துவ, ஹெம்மாத்தகம ஆகிய இடங்களில் இந்த கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், நுவரெலியா, கொட்டாஞ்சேனை, பசறை, அம்பாறை, மடபாத்த, புஸ்ஸல்லாவை, பிலியந்தல, மாத்தளை, கட்டுகஸ்தோட்டை, பலாங்கொடை, களனி, மாத்தறை, ஹோமாகம, கட்டுனேரிய, கம்பஹா, வெலம்பட, கெங்கல்ல, வத்தேகம, அலுபொமுல்ல, கண்டி, கொழும்பு-07, கலகெதர, களுத்துறை, கொழும்பு-10, மாரவில, களுத்துறை தெற்கு, தெஹிவளை மற்றும் கின்தோட்டை ஆகிய இடங்களிலும் மரணங்கள் பதிவாகியுள்ளன.
6 பேர் வீட்டில் வைத்தும், 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும், 56 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் நேற்றையதினம் 29 வயதுக்கு குறைந்தோர் 3 பேர் தொற்றால் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.