மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!
நீர்கொழும்பு – கொழும்பு வீதியில் லியனகேமுல்ல பகுதியில் நேற்று (01) ஒரு மோட்டார் சைக்கிள் விபத்துக்கு உள்ளாகி, 39 வயது நபர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் கட்டுப்பாட்டை இழந்து, மின்கம்பத்தில் மோதியதாக சீதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பெண்ணும், இரண்டு சிறுவர்களும் காயமடைந்தனர். அவர்களை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.