யாழில் அந்தரங்க வீடியோ பார்த்த அப்பா! ஏ.எல் மாணவி தற்கொலை முயற்சி!!

யாழில் இவ் வருடம் ஏ.எல் பரீட்சை எடுக்கவுள்ள மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளாள். கொக்குவில் பகுதியில் உள்ள ஆலயச் சூழலில் இரவு வேளைகளில் சில இளைஞர்களும் குடும்பஸ்தர்களும் கூடிக் கதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர்.
வாகன உரிமையாளரான 50 வயது குடும்பஸ்தரும் குறித்த இளைஞர்களுடன் சேர்ந்து கதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். அவர் தனது கைத் தொலைபேசியில் ஆபாசக் காட்சிகளை தொடர்ச்சியாக பார்த்து வந்துள்ளார். இது அங்குள்ள இளைஞர்களுக்கும் தெரியும். சில வேளைகளில் அந்தக் காட்சிகளால் கைத் தொலைபேசியில் வைரஸ் ஏற்பட்டு தடங்கல்கள் வந்துள்ளது.
இதனனையடுத்து அங்குள்ள இளைஞர்களிடம் தொலைபேசியைக் காண்பித்து கைத் தொலைபேசியில் இருந்த ஆபாசக் காட்சிகளை சில தடவைகள் அழித்து வந்துள்ளார். குறித்த குடும்பஸ்தருக்கு யாழ் நகரப்பகுதியில் பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் இரு மகள்கள் உள்ளார்கள்.
குறித்த குடும்பஸ்தர் ஆபாசக் காட்சிகளைக் கைத்தொலைபேசியில் பார்ப்பது தொடர்பாக குடும்பஸ்தரின் வீட்டுக்கு அருகில் அறை ஒன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவனுக்கு தெரியவந்துள்ளது. பல்கலைக்கழக மாணவன் தங்கியிருந்த அறையின் வீட்டு உரிமையாளரின் மனைவி மாணவியின் உறவினர் ஆவர். அதனால் மாணவி அங்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக் கொண்டிருந்துள்ளார். அவ்வாறு நேற்று முன்தினம் மாணவி அங்கு சென்ற போது குறித்த பல்கலைக்கழக மாணவன் மாணவியின் அப்பாவின் செயற்பாட்டை கூறி மாணவியை நக்கல் அடித்துள்ளார். இதனால் கடும் அவமானமுற்ற மாணவி வீட்டுக்கு வந்து கிணற்றில் குதித்ததாகத் தெரியவருகின்றது.
இதனையடுத்து அயலவர்கள் ஒன்று கூடி மாணவியை காப்பாற்றியுள்ளார்கள். மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போதே மாணவி தனது தந்தையின் செயற்பாடு தொடர்பாக பல்கலைக்கழக மாணவன் தெரிவித்த கருத்துக்களை கூறியுள்ளார். மாணவி கிணற்றில் வீழ்ந்து காப்பாற்றும் மட்டு மாணவியை மீட்க உதவிய குறித்த பல்கலைக்ககழக மாணவன் உடனடியாக அங்கிருநு்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
மாணவியின் தந்தை மற்றும் சில இளைஞர்கள் குறித்த மாணவனை பல இடங்களிலும் தேடியும் மாணவனைப் பிடிக்க முடியாது போயுள்ளது. இதே வேளை மாணவனின் 3 நண்பர்கள் இன்று காலை அவன் தங்கியிருந்த அறைக்கு வந்து அவனது உடமைகளை கொண்டு செல்ல முற்பட்ட போது அயலவர்கள் ஒன்று கூடி அதனைத் தடுத்து நிறுத்தியதுடன் மாணவனை தங்கள் முன் கொண்டு வந்து நிறுத்துமாறும் கூறியதால் குறித்த மாணவனின் நண்பர்கள் அங்கிருந்து சென்றதாக தெரியவருகின்றது.