யாழில் ஆறு வயது குழந்தை கிணற்றில் விழுந்து பலி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 6 வயது குழந்தையொன்று தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை தனது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முற்பட்ட வேளையில் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிசார் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.