யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் சாவு!
மானிப்பாய் – கைதடி பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பிராசா தயாகுமார் (வயது 53) என்ற குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தம்பிராசா தயாகுமார் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, வீதியில் சென்ற இன்னொரு மோட்டார் சைக்கிளை முந்திச் செல்வதற்கான முயற்சியில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் குறித்த மோட்டார் சைக்கிளுடனும், கிளுவை மரத்துடனும் மோதிக்கொண்டு உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.