யாழில் போதைப்பொருள் பாவித்த இளைஞன் பலி
யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியில் 30 வயது இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
போதை ஊசி செலுத்தியமையினால் உயிரிழந்துள்ளாரா என்று சந்தேகிக்கப்படுகிறது.
யாழ் நகர் பகுதியிலுள்ள ராசி புடவைக்கடை முதலாளியின் மகனான 30 வயதுடைய எஸ்.மிதுன்ராஜ் என்பவரே, அறை கட்டிலில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் போதை பொருள் பாவிப்பவர் என தெரியவந்துள்ளது.
நேற்றிரவு வீட்டுக்கு வந்து, சாப்பிட்டபின் படுக்கைக்கு சென்று சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
வழக்கமாக போதைபாவனையின் பின் வீட்டுக்கு வருபவர் எனவும் தெரிய வந்துள்ளது.