யாழில் மெக்கானிக் வேலை செய்தவனை கனடா மாப்பிளை என ஏமாற்றி திருமணம்!

யாழ் தென்மராட்சிப் பகுதியைச் சேந்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் 34 வயதான பெண் சாமினி (பெயர் மாற்றம்)க்கு கடந்த டித்வா சூறாவளிக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இ்ந் நிலையில் மாப்பிளையின் தாயும் மற்றொரு நபரும் பெண் வீட்டாரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்கள்.
37 வயதான மாப்பிளை அருண் ( பெயர் மாற்றம்) சாவகச்சேரிபப் பகுதியைச் சேர்ந்தவர். தந்தை காலமாகிய நிலையில் சகோதரர்களுடன் வசித்து வந்த அருண் 2015ம் ஆண்டின் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியுள்ளார். அதன் பின்னர் அவர் கனடா சென்று விட்டதாக குறித்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் அருணின் தாயார் கூறி வந்துள்ளார். அருண் சாவகச்சேரி ஏ9 வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் இடமொன்றில் நீண்ட காலமாக வேலை செய்து வந்தவன். அங்கு வேலை செய்து வந்த போது அருணுக்கு கொடிகாம் மற்றும் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையங்களில் ஓரிரு வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன. குறித்த வழக்குகள் திருட்டு மோட்டார் சைக்கிள்களை வாங்கி விற்றமை தொடர்பானது எனத் தெரியவருகின்றது. இவ்வாறான நிலையிலேயே அருண் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிதுடன் ,அருண் கனடா சென்று விட்டதாக தாயார் கூறியும் வந்துள்ளார்.
அதன் பின்னர் சில காலங்கள் அருண் தொடர்பான தகவல்கள் யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் கனடாவில் இருப்பது போன்ற தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய ரிக்ரொக் மற்றும் பேஸ்புக் போன்றவற்றில் கடந்த வருட தொடக்கத்திலிருந்து அருண் காட்சி கொடுக்கத் தொடங்கினான். அதன் பின்னர் ஊர்ச் சனம் அனைவரும் அருண் கனடாவில் வாழ்வதாகவே நம்பியுள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் அருணுக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்ணான அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் பெண் ஒருவருடன் திருமண நிச்சயம் நடைபெற்று, புயலுக்கு சில நாட்களுக்கு முன் செல்வச்சந்நிதியின் திருமணமும் நடந்து முடிந்துள்ளது. திருமணம் நடந்து முடிந்த பின்னரே அருண் கனடாவில் வாழவில்லை என்ற தகவல் பெண்ணுக்கும் அவளது குடும்பத்தினருக்கும் தெரிந்துள்ளது. இதன் பின்னர் அருணின் வீட்டார் மற்றும் பெண் வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் கைகலப்பாக மாறியது. இதனையடுத்து மாப்பிளை வீட்டாரின் புறோக்கராக இருந்த கோயில் பூசாரி ஒருவரும் மாப்பிளையின் தாயாரும் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கால்கள் மற்றும் முதுகுப் பகுதியில் தா்க்குதல் காயங்களுடன் காணப்பட்ட பூசாரி பொலிசாரிடம் முறையிடச் சென்ற போது மாப்பிளையின் உறவுகள் பூசாரினை இடை மறித்து வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் குறித்த திருமணச் செயற்பாட்டில் புறோக்கரான பூசாரியும் அப்பாவி என்றும் அவரும் அருணிண் தாயின் ஏமாற்று வேலை தெரியாதே திருமணம் பேசித்திரிந்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றார்கள்.
குறிப்பு – அருண் மற்றும் பூசாரி, அருணின் தாய். உறவுகளின் புகைப்படங்கள் எமக்கு பெண் வீட்டு உறவுகள் மூலம் கிடைத்துள்ளன. தாக்குதலுக்குள்ளானவர்கள் பொலிசாரிடம் செல்லாத காரணத்தால் பெண் வீட்டு உறவுகளின் கோரிக்கைக்கு ஏற்ப அவற்றை நாம் பிரசுரிக்கவில்லை.



