யாழ்ப்பாணத்தில் இருந்து அநாதரவாக வெளியேறிய சம்பந்தனின் பூதவுடல்
இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவர் இரா சம்பந்தனின் பூதவுடல் கொழும்பில் இருந்து விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக தந்தை செல்வா கலையரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தது.
எனினும் யாழ்ப்பாணத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக கட்சி தொண்டர்களை தாண்டி பொதுமக்கள் பெரிதாக ஆர்வம் காட்டியிருக்கவில்லை.
இந்நிலையில் இன்றைய தினம் தந்தை செல்வா கலையரங்கத்தில் இருந்து பூதவுடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட போது ஒரு சிலரை மாத்திரமே காண முடிந்தது.