ரணில்-சஜித் இணைவு: பரபரப்பு பேச்சுவார்த்தை!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவி சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டால், இணைந்து செயற்படுவது சாதகமாக பரிசீலிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின்னர், இணைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.