லொஹான் ரத்வத்தா தம்பதியருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தையையும் எதிர்வரும் டிசம்பர் 6 வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் வசமிருந்த, இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை மிரிஹான பொலிஸார் கடந்த ஒக்டோபர் 26ஆம் தேதி கண்டுபிடித்ததை தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.