வவுனியா மாவட்டத்திற்கு தனி பல்கலைக்கழகம்!
இதுவரை நாளும் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கிளையாக செயற்பட்டு வந்த யாழ் பல்கலை வவுனியா வளாகமானது அதிவிசேட வர்த்தமானி மூலம் வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் கல்வி அமைச்சர் பீரிஸின் கையொழுத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
“இலங்கை வவுனியா பல்கலைகழகத்தில்” வியாபார கற்கை, பிரயோக விஞ்ஞான கற்கை மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைகள் இடம்பெற வேண்டும் என குறித்த வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 1ம் திகதி முதல், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் எனும் பெயர் அமுலாகும்.
உள்நாட்டு மூல வள அடிப்படையினுள் விழுமியத்தை உருவாக்குதல் பற்றி மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதன் மீது, இந்த பல்கலைகழகம் கூடுதலான அழுத்தத்தை கொண்டிருத்தல் வேண்டும் என வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளது.