வாட்ஸ்அப் மூலம் விசா மோசடி, அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வாட்ஸ்அப் ஊடாக அமெரிக்க வீசா மோசடி தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விசா விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில், கொழும்பில் உள்ள தூதரகப் பிரிவு, விசா விண்ணப்பம் தொடர்பாக தொடர்பு கொள்ள WhatsApp ஐப் பயன்படுத்தாது என தூதரகம் தெரிவித்துள்ளது.
“உங்களுக்கான வேலை வாய்ப்புகளை நாங்கள் உறுதிப்படுத்தவில்லை. அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தூதரகத்தால் காப்பீடு தேவையில்லை. இந்த கூடுதல் விசா சேவைகளுக்கு உங்களிடம் கட்டணம் வசூலிக்க முயற்சிக்கும் ஒருவர் உங்களை மோசடி செய்ய முயல்கிறார்” என்று தூதரகம் கூறியது.
உத்தியோகபூர்வ அமெரிக்க விசா தகவல்கள் எந்த கட்டணமும் இன்றி கிடைக்கும் என்று அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது ustraveldocs.com/lk