வெளிவந்தது துவாரகா இல்லை – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை!
தமிழீழ தேசிய மாவீரர் நாளில் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் மகள் துவாரகாவின் பெயரில் வெளிவந்த காணொளியை நாடு கடந்த தமிழீக அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற உறுதியான தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் எமது அவதானங்களின் வழி நின்று இந்த முடிவினை நாம் எடுத்துள்ளோம்.
தேசிய தலைவரின் மகளாக வேறொருவரை முன்வைப்பது எங்கள் உள்ளங்களில் பெரும் வேதனையை ஏற்படுத்துகின்றது. பொது வழியிலும் பொதுத்தளத்திலும் தமிழ் மக்கள் இந்த விடயத்தினை நிராகரித்திருப்பது நம்பிக்கையை தந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.