மியன்மார் அகதிகள் 12 பேருக்கு சிறை, ஏனையோர் முகாமுக்கு

மியன்மாரில் இருந்து இலங்கைக்கு அகதியாக வந்த 115 ரோகிங்யர்களை முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறைக்கு நேற்று (20)கொண்டு செல்லப்பட்டு திருகோணமலை துறை முகப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த படகில் பயணித்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வாக்கு மூலத்தை பதிவு செய்த பின்னர் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் அப்துல் சலாம் சாஹிர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அகதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ச. டெ. சஷ்னி குறித்த நபர்கள் சந்தேக நபர்களன்றி அகதிகளாக கருதப்பட வேண்டும் எனவும் இவர்களை நுகேகொடையில் உள்ள அகதிகள் தங்குமிடமான மிரிகானைக்கு அனுப்புமாறு தனது விண்ணப்பத்தை பதில் நீதிவானிடம் முன்வைத்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட பதில் நீதிவான் குறித்த மிரிகானை பகுதிக்கு அனுப்புமாறு பொலிசாருக்கு கட்டளையிட்டார் தற்போது அனுப்ப முடியாத நிலை உள்ளதால் சனிக்கிழமை (21) குறித்த அகதி முகாமுக்கு அனுப்பலாம் என அவர்களது விண்ணப்பத்தை சமர்ப்பித்த பொலிசார் இவர்களில் 115 நபர்களில் 103 நபர்களை திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமை (20) இரவு முன்னெடுத்தனர்.

திருகோணமலை துறை முக பொலிஸார் பொலிஸார் குடிவரவு குடியகழ்வு சட்டத்தின் பிரகாரம் வழக்கினை பதிவு செய்து படகு ஓட்டுனர், உதவியாக இருந்தவர்கள் மற்றும் பயண ஏற்பாடுகளை ஏற்பாடுகளை செய்த குற்றச்சாட்டில் 12 நபர்களை தடுப்புக்காவலில் வைக்குமாறும் குறித்த பதில் நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.