1200பேரின் மரணத்தை தடுக்க இதுதான் வழி!
ஊரடங்கு சட்டத்தினை உடன் அமுலாகும் வகையில் அமுல்படுத்தப்பட்டால் 1200பேர் உயிரிழப்பதனை தவிக்க முடியுமென ராஜரட்ட பல்கலை கழக பேராசிரியர் சுனேத்அகம்பொடி தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு உள்ள நிலைமையில் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தினால் எதிர்வரும் 20 நாட்களில் ஏற்படக்கூடிய 1200 மரணங்களைளினை தவிர்க்கமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் இரு வாரத்தில் தினமும் சுமார் 150பேர் வரை உயிரிழப்பார்கள் என கடந்த 7ம் திகதி அவர் எச்சரிகையும் விடுத்திருந்தார்.
அமெரிக்க யேல் பல்கலைக்கழக தொற்றுநோய் நிபுணராக பணியாற்றி வரும் பேராசிரியர் சுனேத் ராஜரட்ட பல்கலைக்கழகத்திலும் கடமையாற்றி வருகிறார்.
இலங்கையின் கொரோனா புள்ளி விபரத்தரவுகளின்படி இவ்விடயத்தை எதிர்வுகூற முடிவதாகவும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்த 5 நாட்கள் பின்போனால் சுமார் 700 மரணங்கள் வரை ஏற்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.