14விதமான வைரஸ் திரிபு கொழும்பில் கண்டுபிடிப்பு!
மரபணு மாறியதாக சந்தேகிக்கப்பட்டும் 14விதமான கொரோனா மாதிரிகாள் கொழும்பு மாநகர பகுதிக்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதனை பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் உறுதிப்படுத்தினார்.
இது குறித்து தெரிவிக்கையில்,
கொழும்பில் டெல்டா மாறுபாடு பரவிய பிரதேசத்தில் 25 பேரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளில் மரபணு மாறியதாக சந்தேகிக்கப்படும் 14 மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
மரபணு மாறியதில் டெல்டா மாறுபாடு இல்லை என்றால் வேறு மாறுபாடு உள்ளதா என்பதனை மரபணு வரிசைமுறை பகுப்பாய்வு மூலம் மாத்திரமே கண்டுபிடிக்க முடியும்.
தற்போது இது குறித்த பரிசோதனைகள் தொடங்கபட்டுள்ளதாக ஶ்ரீ ஜெயவர்னபுர பல்கலைக்கழக பேராசிரியர் சந்திம ஜீவன்தர தெரிவித்தார்.
மரபணு மாறியதாக மாதிரிகள் பெறப்பட்ட கொழும்பின் பிரதேசம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.