143 தோட்டாக்களுடன் கைதான முன்னாள் இராணுவ வீரர்!
அம்பாறை வாவின்ன பரகஹகலே பகுதியில், கடந்த 17 ஆம் திகதி மாலை, 51 வயதான முன்னாள் ஓய்வுபெற்ற இராணுவ சிறப்புப் படை வீரர், கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது, அம்பாறை விசேட அதிரடிப் படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடந்துள்ளது. சந்தேக நபர், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக தானியங்கி கைத்துப்பாக்கி, 143 தோட்டாக்கள், இரண்டு தோட்டா மெகசீன்கள் மற்றும் ஆயுதங்களை சுத்தம் செய்யும் கருவியை தம்வசம் வைத்திருந்தார்.
மேலும், சந்தேக நபரின் வீட்டு காணி மையமாகும் இடத்தில் 9 எம்.எம் துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்கள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கியின் இலக்கம் அழிக்கப்பட்டுள்ளதுடன், அவரது கையிருப்பு குறித்து பொலிஸாரின் விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், சந்தேக நபரின் மீதான விசாரணைகளில், அவர் இந்த துப்பாக்கியை எந்த இடத்திலிருந்து பெற்றார் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. வடப்பகுதியில் போர் நேரத்தில் இவ்வாறு ஆயுதத்தை எடுத்தார், அல்லது விடுதலைப் புலிகளின் பயன்படுத்திய துப்பாக்கி அல்லது இராணுவ களஞ்சியத்தில் இருந்து கடத்திய ஆயுதம் என பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.