சரத் பொன்சேகா அடித்த 16 கோடி பணத்தின் பெரும் பகுதியை சேதமாக்கிய கரையான்கள்!
தனது மருமகனின் தாயாரின் பெயரில் தனியார் வங்கிப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சரத் பொன்சேகாவிற்கு சொந்தமான 16 கோடி பணத்தில் பெருந்தொகையானவை கரையான்களால் சேகமாக்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தனக்கு கிடைத்த 527,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 100 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பணத்தை தமது பிரசார நன்கொடையாக பெற்றிருந்தார்.
இது இலங்கை நாணய பெறுமதியில் சுமார் 16 கோடியே 45 இலட்சம் ரூபாவென தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த பணம் இலங்கையில் உள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டிருந்த நிலையில், பரிவர்த்தனை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் அந்த பணத்தை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த பணத்தை தமது மகளின் கணவரின் தாயாருக்கு தற்காலிகமாக வைத்து கொள்வதற்காக வழங்கப்பட்ட சரத் பொன்சேகா முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், பரிவர்த்தனை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தாம் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் அப் பணம் சரத் பொன்சேகாவுக்கு சொந்தமானது எனவும் சட்டமா அதிபர் மற்றும் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்
இதன்படி, சரத் பொன்சேகா உரிய பணத்தை கோரி நீதிமன்றத்தில் சத்திய கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
பணத்தை விடுவிப்பதா இல்லையா என்பதை நிதியமைச்சு தீர்மானிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதன்படி, உரிய பணத்தை விடுவிக்குமாறு சரத் பொன்சேகா நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிடம் எமது செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினாவியது.
அதற்கு பதிலளித்த அவர், குறித்த பணத்தை விடுவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளதாகவும் எனினும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.