16 வயது சிறுமியை தகாத தொழில் ஈடுபடுத்திய பெண் உட்பட மூவர் கைது
கொழும்பில் வேலை வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி 13 வயது சிறுமிகளை ஏமாற்றுகின்ற கும்பல் தொடர்பில் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இளம் சிறுமிகளை குறி வைத்து இந்த மோசடி கும்பல் செயல்பட்டு வருவதாக போலீசார் கூறுகின்றனர்.
அதன்படி கண்டி, வத்தேகம பகுதியினை சேர்ந்த 16 வயதான பதின்ம வயது சிறுமிக்கு சலூனில் வேலை பெற்றுத்தருவதாக கூறி, கொழும்பில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பாலியல் தொழில் நடத்தும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் குறித்த சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரு நபர்களாலும் சிறுமி முறையற்ற விதத்தில் நடத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் பார்த்த விளம்பரத்தின் அடிப்படையில் கொழும்பில் வேலையை செய்ய குறித்த சிறுமி முன்வந்துள்ளார்.
இரத்தினபுரியை சேர்ந்த ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு தனது சலூனில் வேலை உள்ளதாக கூறி கொழும்பிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
பின் குறித்த சிறுமியை சந்தித்த நபர், தலவத்துகொட பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
வேலை வாங்கி தருவதாக யுவதியை ஏமாற்றி இந்த இடத்தில் இணைத்த நபர், மசாஜ் நிலையத்திற்கு அழைத்து சென்ற உரிமையாளர், உரிமையாளரின் இரகசிய காதலி என கூறப்படும் 23 வயது யுவதி மற்றும் மசாஜ் மையம் இயங்கும் கட்டிடன் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கலுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.