18ஆயிரம் மில்லியன் பெறுமதியுடைய போதைப் பொருட்கள் மீட்ப்பு!
இந்த வருடம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 18,790 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான போதைப்பொருள் இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினரால் நவம்பர் 16 அன்று மேற்கே ஆழ்கடல் பகுதியில் 46 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒரு மீன்பிடி படகை கைப்பற்றப்பட்டது. அந்த படகில் இருந்த 5 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட படகின் மீனவர்கள் 23 முதல் 33 வயதுக்கு இடையில் உள்ளவர்கள் மற்றும் அவர்கள் கந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்களும், படகும், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.