பெருந்தோட்ட தொழிலாளருக்கு சம்பள உயர்வை உறுதி செய்கிறோம் – ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நுவரெலியாவில் இன்று (03) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வை உறுதி செய்வதாகவும், அவர்களுக்கு அடுத்த வரவு-செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு கிடைக்கும் எனவும் உறுதியளித்தார்.
உயர்ந்த வாழ்க்கை நிலையை அமைக்க பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய அன்றாட உழைப்புக்கு ஏற்ப கூலி பெற வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த காலத்தில் 1,700 ரூபா சம்பள உயர்வு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதும், அது நிறைவேற்றப்படாததற்காக மக்களை ஏமாற்றிய அரசியல்வாதிகளைவும், வாக்குறுதியை நிறைவேற்றாத முந்தைய ஆட்சியாளர்களை அடிக்கடி விமர்சித்தார்.
மேலும், 2025 வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு அறிவிக்கப்படும் என்றும், அரசாங்கம் மக்களின் நலனுக்காக செயல்படும் அரசியல் நிலைப்பாடு கொள்கை ரீதியாக முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.
சந்தை நிலைமை மோசமாக இருந்தாலும் மக்கள் நிவாரணங்களை நம்பி வாழ வேண்டிய நிலையை முறியடிக்க, நுவரெலியாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் முன்மொழிந்தார்.
அரசியல்வாதிகளின் வீண் செலவுகளை குறைத்துப் பொதுமக்களின் நலனுக்காக பொருளாதாரத்தை மேம்படுத்தும் புதிய நடைமுறைகளை தமது தலைமையில் அமல்படுத்தப் போவதாகவும், இது பழிவாங்கும் நடவடிக்கையாக அல்ல எனவும் ஜனாதிபதி திடமாக தெரிவித்தார்.