33 பிக்குகள் படுகொலை, விசாரணைகள் ஆரம்பம்!

1987ம் ஆண்டு அரந்தலாவையில் 33புத்த பிக்குகள் படுகொலை செய்யபட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு துறை விசாரணையை ஆரம்பித்துள்ளதாக, உயர்நீதிமன்றில் சட்டமா அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1987ம் ஆண்டு ஜூன்2ம் திகதி அம்பாறை மாவட்டத்தின் அரந்தலாவ பகுதியில் வைத்து புலிகளென நம்பப்படுபவர்களால் இந்த தாக்குதல் நடத்தபட்டது.

பௌத்தபிக்குகள் மற்றும் சிலபொது மக்களுடன் சென்றபேருந்து நுவரகலதென்ன பகுதிக்கு அருகில் 20ஆயுதம் ஏந்திய நபர்களால் வழிமறிக்கப் பட்டது.
மகாவாபியில் உள்ள விகாரையில் இருந்து களனிராஜா மகாவிகாரைக்கு புனிதயாத்திரை மேற்கொண்ட பௌத்தபிக்குகள் பேருந்தில் இருந்தனர்.

அரந்தலாவ காட்டுபகுதிக்கு பேருந்து கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் பௌத்தபிக்குகள் மீது துப்பாக்கிசூடு, வாள்வெட்டு நடத்தப்பட்டதில், 7 – 18 வயதிற்கு உட்பட்ட 30 இளம்பிக்குகள் கொல்லப்பட்டனர்.

அத்தோடு மூன்றுபிக்குகள் பலத்தகாயத்துடன் தப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.