கிளிநொச்சியில் 338 குளங்களை காணவில்லை
கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான 8 பாரிய நீர்ப்பாசன குளங்களும், கமநல சேவைகள் திணைக்களத்திற்குச் சொந்தமான 465 சிறிய குளங்களும் காணப்படுகின்றன என கிளிநொச்சி மாவட்ட செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் கமநல சேவைகள் திணைக்களத்திற்குச் சொந்தமான 464 சிறிய குளங்களில் 126 குளங்களே தற்போது பயன்பாட்டில் உள்ளன. மிகுதி 339 குளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன. அல்லது காணாமல் போய்விட்டன.
எஞ்சிய 126 குளங்களிலும் பல வருங்காலத்தில் காணாமல் போய்விடும் நிலைமையே காணப்படுகிறது. குளங்கள் காணாமல் போக போக நல்ல நிலத்தடி நீரும் காணால் போகிறது அதன் விளைவுகளே பல கிராமங்கள் காணாமல் போயிருகின்றன. எதிர்காலத்தில் இன்னும் பல கிராமங்கள் காணாமல் போகும்.