40வருடத்தின் பின் மீண்டும் இலங்கை நேபாள விமான சேவை ஆரம்பம்!
இலங்கையில் இருந்து நேபாளத்திற்கான நேரடி விமானசேவைகள் 40வருடங்களுக்கு பின்னர் எதிர்வரும் 31ம்திகதி தொடக்கம் மீளவும் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த விமான சேவையில் ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ் ஈடுபடவுள்ளதோடு ஆகஸ்ட் 31 தொடக்கம் கொழும்பு மற்றும் நேபாளத்தின் தலைநகர் கத்மாண்டுவுக்கு இடையேயான நேரடி விமானசேவைகள் இடம்பெறவுள்ளது.
இரு நகரங்களிற்கு இடையேயும் வாரத்திற்கு இரண்டு தடவை விமானங்களை மீள ஆரம்பிப்பதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இரண்டு நாடுகளுக்கு இடையேயான நேரடி விமான சேவையானது சுற்றுலாவை மேம்படுத்துவதோடு இரு நாட்டு மக்களிடையேயும் மக்கள் தொடர்பை மேம்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காத்மாண்டு மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி விமான சேவை 40 வருடங்களுக்கு முன் ரோயல் நேபால் ஏயர்லைன்ஸ் இயக்கி வந்த நிலையில் வணிக ரீதியாக சாத்தியமில்லாத காரணத்தால் இடையில் நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.