442 மில்லியன் அமெரிக்க டாலர் அதானி திட்டத்திற்கு இலங்கை ஒப்புதல் அளித்துள்ளது

மன்னார் மற்றும் பூநேரியில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் அமைக்கப்படவுள்ள இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு இலங்கை முதலீட்டுச் சபை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

மன்னாரில் உள்ள காற்றாலை மின் நிலையம் 250 மெகாவாட் திறனிலும், பூநேரியில் உள்ள காற்றாலை மின் நிலையம் 100 மெகாவாட் திறனிலும் இயங்கும்.

350 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை மின் நிலையங்கள் இரண்டு ஆண்டுகளில் செயல்படத் திட்டமிடப்பட்டு, அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் அவை தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும்.

அத்தோடு இந்த புதிய திட்டம் ஊடாக 1500-2000 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள்  உருவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.