50 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் கைது
50 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
பிங்கிரிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றினை நடத்தும் 50 வயதுடைய பெண் ஒருவர் சிற்றுண்டிச்சாலையில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன்படி, பிங்கிரிய பொலிஸ் அதிகாரிகளின் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபரான சார்ஜன்ட் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .