500 அடி பள்ளத்தில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

பதுளை மாவட்டத்தில் மடுல்சீமை பகுதியில் 500 அடி ஆழமான பள்ளத்தில் வீசப்பட்டதாக கூறப்படும் இளைஞனின் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 22 வயதுடைய விவேகானந்தன் சூரியன் உயிரிழந்ததாக தெரிய வருகிறது.

இந்த சடலத்தை மீட்க, இராணுவ கமாண்டோ படையின் மூன்று வீரர்கள் கயிறுகளை பயன்படுத்தி பள்ளத்தின் ஆழத்தில் இறங்கி, மோசமாக சிதைந்த நிலையில் காணப்பட்ட சடலத்தை மேலே கொண்டு வந்தனர். இச்செயல்பாட்டில் 10 கமாண்டோக்கள், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், பதுளை நீதவான் நீதிமன்றம் அவர்களை வரும் 25ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

உயிரிழந்த இளைஞரின் தந்தை, 30ஆம் தேதி தனது மகன் திருமண நிகழ்விற்கு சென்று திரும்பவில்லை எனக் கூறி, 6ஆம் தேதி ஹாலிஎல் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.