500 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ள சிலிண்டர்!
ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றால், மகளிருக்கு மாதம் 2,100 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில், 5 லட்சம் இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் பாஜக கூறியுள்ளது.
பொது சிவில் சட்டம் ஜார்க்கண்ட்டில் அமல்படுத்தப்பட்டாலும், பழங்குடியினர் இதற்கு பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள், மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன, எனவே தேர்தலின் போது மக்களின் ஆதரவைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு பாஜக இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.