சதொச நிறுவனம் மூலம் மாதம் 5,700 மில்லியன் வருமானம்

5,700 மில்லியன் மாதாந்த வருமானம் பெறும் நிறுவனமாக லங்கா சதொச நிறுவனத்தை மாற்றியுள்ளதாக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நஷ்டத்தில் இயங்கி வந்த லங்கா சதொச நிறுவனத்திற்கு, தேவையான வசதிகளை செய்து கொடுத்து, இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற முடிந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்குள், உணவுகளை சரியான முறையில் நிர்வகித்ததன் மூலம், உணவு வரிசைகள் உருவாகாமல் தடுத்தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், புத்தகங்கள், பென்சில்கள் போன்ற பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.