6 பிள்ளைகளின் தாய், 14 வயது சிறுவனோடு ஓட்டம்
திருமணம் செய்து 6 குழந்தைகளிற்கு தாயான 40வயதுடைய பெண் ஒருவர் 14 வயது சிறுவனை காதலித்து வந்த நிலையில், அவனோடு வீட்டை விட்டு வெளியேறிச் சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
காதலிற்கு கண் இல்லை என்று சொல்வார்கள், ஆனால் வயதும் இல்லை என்பதை போல ஒரு சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் தாஹோத் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதுடைய பெண்ஒருவர் காந்தி நகரில் கூலி தொழிலாளியாக வேலை செய்துவருகிறார்.
இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 6 குழந்தைகளோடு வசித்து வருகிறார்.
இந்நிலையில் காந்தி நகரில் தன்னோடு கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த 14 வயது சிறுவனுக்கும் 40வயதுடைய 6 பிள்ளைகளின் தாயிற்கும் காதல் மலந்துள்ளது.
இருவரது காதலும் முத்திய நிலையில், தன்னுடைய கணவர் மற்றும் 6 குழந்தைகளை விட்டுவிட்டு சிறுவனோடு சென்றுவிடுவதுதான் என தீர்மானித்த அந்த பெண், சிறுவனோடு ஓடி தலைமறைவாகினார்.
இதன் இடையே இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி ஒருமாதம் கடந்து விட்ட நிலையில் சிறுவனது பெற்றோர் காவல் நிலையத்திற்கு சென்று தமது 14 வயதாகும் மகனை அந்த பெண் கடத்திவிட்டதாக முறைப்பாடு செய்தனர்.
தங்களது மகன் 2007-ல் பிறந்தான், அவனிற்கு 14 வயதுதான் ஆகிறது என அவனின் தந்தை ஆதார் அட்டையினை ஆதாரமாக காட்டியுள்ளார்.
இதன்போது காவல்துறையினரின் விசாரணையின்படி குறித்த சிறுவன் தான் 1997ல் பிறந்தவன் எனவும், எனக்கு சட்டப்படி வயது இருப்பதாக கூறியிருக்கிறான். எனவே குழப்பம் அடைந்துள்ள காவல்துறையினர் தந்தையிடம் சிறுவனது பிறப்பு சான்றிதழை கொண்டுவரும்படி கூறியிருக்கின்றனர்.
சிறுவனுக்கு 18வயதைவிட குறைவு என்பது உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே பேஸ்கோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியுமெனவும் போலீசார் கூறியுள்ளனர்.