100 நகரங்களை அழகுபடுத்த 600 மில்லியன் ஒதுக்கீடு
100 நகரங்களை அழகுபடுத்தும் விசேட திட்டத்திற்காக 2024 வரவு செலவு திட்டத்தில் 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு பேருந்து நிலையங்களின் அபிவிருத்தி, கம்பஹா, மினுவாங்கொடை, பாணந்துறை, அலவ்வ, ஹொரண மற்றும் அவிசாவளை பொதுச் சந்தைகளின் அபிவிருத்தி, வரக்காபொல மற்றும் , நிந்தவூர் கடற்கரைப் பூங்கா நிர்மாணம் ஆகிய 9 திட்ட பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வருட இறுதிக்குள் உரிய வேலைத்திட்டங்களை நிறைவு செய்யும் திட்டங்களை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து நகர அபிவிருத்திக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபையே பொறுப்பு. அதற்கான பணிகளை தற்போது அதிகாரசபை மேற்கொண்டு வருகிறது. நகர அபிவிருத்தியின் ஊடாக நாட்டில் பெருமளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.